×

ஊட்டி அருகே கெரடா லீஸ் பகுதியில் காட்டு யானைகளை விரட்டக்கோரி கலெக்டர் ஆபீசில் மக்கள் மனு

ஊட்டி, பிப்.29: நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. காட்டு யானைகள், காட்டு மாடுகள், கரடி, சிறுத்தை, புலி உட்பட அனைத்து விலங்குகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு யானைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி மனித விலங்கும் முதல் ஏற்பட்டு பொதுமக்கள் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகளில் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில், தற்போது அனைத்து பகுதிகளிலும் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு உணவு தேடி வரும் பொழுது மனித விலங்கு முதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. ஊட்டி அருகே உள்ள அறைஹட்டி, கெரடா லீஸ் போன்ற பகுதிகளில் நாள்தோறும் ஐந்து காட்டு யானைகள் கூட்டம் வலம் வரத்துவங்கியுள்ளன. இவைகள் இப்பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வலம் வருகின்றன. அறைஹட்டி பகுதியில் இருந்து கெரடாலீஸ் பகுதிக்கு செல்லும் நடைபாதை வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்லும் போது யானைகள் அவர்களை விரட்ட துவங்கி விடுகின்றன. மேலும் இந்த கிராமத்திற்குள் இரவு நேரங்களில் வரும் காட்டு யானைகள் அங்குள்ள கட்டிடங்களை இடிப்பது தடுப்புச் சுவர்களை இடிப்பது போன்ற செல்களிலும் ஈடுபடுகின்றன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் தற்போது தங்களது கிராமத்திற்கு இரவு நேரங்களில் செல்லவே அச்சப்படுகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை காட்டு யானைகள் இதே பகுதியை சேர்ந்த சிலரை விரட்டியுள்ளன. ஆனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக யானைகளிலிருந்து தப்பி சென்றுள்ளனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இந்த காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெரடாலீஸ் பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். தங்கள் குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதையடுத்து இதுகுறித்து கூடுதல் எஸ்பி சௌந்தர்ராஜன், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க கூறியுள்ளதாக கூறி பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

The post ஊட்டி அருகே கெரடா லீஸ் பகுதியில் காட்டு யானைகளை விரட்டக்கோரி கலெக்டர் ஆபீசில் மக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Collector ,Kerada Lees ,Ooty ,Nilgiri district ,Collector's ,Kerada Lease ,Dinakaran ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...